Rural Development & Panchayat Raj , Tamil Nadu
கிராம ஊராட்சியின் எல்லைக்குள் அமையப்பெற்றுள்ள கட்டிடங்களின் மீது வசூலிக்கப்படும் வரியேவீட்டு வரி எனப்படுகிறது. கட்டிடம் என்பது அவ்வூராட்சியில் உள்ள வீடுகள் மற்றும் இதர அனைத்து வணிக மற்றும் நிறுவனகட்டிடங்களை உள்ளடக்கியதாகும்.
வீட்டின் உரிமையாளர் இவ்வரியினை தொடர்புடைய கிராம ஊராட்சிக்கு செலுத்தவேண்டும்.
வீட்டுவரி / சொத்துவரியானது இசொத்தின் வகைப்பாட்டின் அடிப்படையில் ஒரேமாதிரியான தாகவோ (கடயவசயவந) அல்லது கட்டப்பட்ட அளவுகளின் அடிப்படையிலோ கணக்கிடப்படுகிறது. இது தொடர்பாக இவிதிக்கப்படும் வீட்டுவரி / சொத்து வரியினை இவ்விணையதளத்தில் உள்ள சொத்து வரிகணிப்பான்(வுயஒ உயடஉரடயவழச) என்கிறசுட்டியை அழுத்தி விவரங்களைப்பெறலாம்.
சொத்து வரியானது ஒரு கட்டடம் எப்போது முடிக்கப்படுகிறதோ அப்போதிலிருந்தே சொத்து வரி விதிக்கப்படும். மேலும் இந்த வீட்டு வரி விதிப்பானது தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 –ன்பிரிவு 172 –ன் படியும் இ தமிழ்நாடுகிராமஊராட்சிகள் (வரிவிதிப்புமற்றும்வசூலித்தல்) விதிகள் 1999-ன் படியும்கணக்கிடப்படுகிறது..
வீட்டுவரி / சொத்து வரியானது கட்டடத்தின் உரிமையாளரால் அரையாண்டு துவக்கத்தின் முதல் 30 தினங்களுக்குள்ளாகவோ அல்லது வருடத்துவக்கத்தின் முதல்60 நாட்களுக்குள்ளாகவோ செலுத்தப்படவேண்டும்.
கட்டிடஉரிமையாளர் குறிப்பிட்ட காலவரையறைக்குள் செலுத்தாமலிருப்பின் இ கட்டப்படாதவரியின் ஒவ்வொரு நூறுரூபாய்க்கும் ரூ.1.50 யிலிருந்து ரூ.2 வரை கிராம ஊராட்சியால் நிர்ணயிக்கப்படும் ஏதேனும் ஒரு தொகையை ஒவ்வொரு மாத மும்தாமதக்கட்டணமாக செலுத்த வேண்டும். இவ்வாறு வசூலிக்கப்படும் தாமதக்கட்டணம் வீட்டு வரி விதிப்பின் அரை ஆண்டின் துவக்கத்திலிருந்து 30 நாட்களுக்கான அவகாசத்திற்கு பிறகே (அதாவது அரையாண்டு வீதம் வசூலிக்கப்படுமானால்) அல்லது ஆண்டு துவக்கத்திலிருந்து 60 நாட்களுக்கான அவகாசத்திற்கு பிறகே (அதாவது முழு வருடத்திற்கான வரி விதிப்பாயின்) வசூலிக்கப்படவேண்டும்.
கிராம ஊராட்சி செயலர் வீட்டு வரி மற்றும் இதரவரி மற்றும் வரியில்லா வருவாயினங்களை விதிகளுக்குட்பட்டு வசூல் செய்யும் பொறுப்பு அலுவலர் ஆவார்.
வீட்டுவரி/சொத்து வரியினை பொது மக்கள் கீழ் காணும் வகைமைகளின் மூலம் செலுத்த இயலும்.
நேரடியாக பணம் செலுத்துதல் (ஊயளா)
ருீஐ-கூகுள்பேஇ போன்பே நவஉ மூலம்
வங்கி அட்டை (யுவுஆ அட்டை)
கடன் அட்டை (ஊசநனவை ஊயசன)
இணையதன வங்கிச்சேவை மூலம் (ஐவெநசநெவ டீயமெபெ)
ஆம். சிலவகையான கட்டடங்கள் வீட்டுவரி/ சொத்து வரி செலுத்து வதற்கு விலக்கு உள்ளது. அதன் விபரங்கள் கீழ்காணும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது வழிபாட்டிற்காக ஒதுக்கப்பட்ட கட்டிடங்கள் மற்றும் உண்மையில் அவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன அல்லது வேறு எந்த நோக்கத்திற்காகவும் பயன்படுத்தப்படவில்லை;
வாடகை வசூலிக்கப்படாத தொழிலுக்கான சோல்ட்ரிகள் மற்றும் தொழிலுக்கு வசூலிக்கப்படும் வாடகையானது தொண்டு நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
பொதுமக்களுக்குத் திறந்திருக்கும் விடுதிகள் மற்றும் நூலகங்கள் உட்பட கல்வி நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் கட்டிடங்கள் மற்றும் ஆதரவற்றோர் அல்லது விலங்குகளுக்கு அடைக்கலம் அளிக்கும் தொண்டு நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படும் பொதுக் கட்டிடங்கள்
பழங்கால நினைவுச்சின்னங்கள் பாதுகாப்புச் சட்டம், 1904 இன் கீழ் பாதுகாக்கப்பட்ட பழங்கால நினைவுச்சின்னங்கள் அல்லது அதன் பகுதிகள், குடியிருப்பு குடியிருப்புகளாகவோ அல்லது பொது அலுவலகங்களாகவோ பயன்படுத்தப்படுவதில்லை
தொண்டு மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்கள் மற்றும் பிற கட்டிடங்கள் தொண்டு நோக்கங்களுக்காக பிரத்தியேகமாக பயன்படுத்தப்படுகின்றன
ரயில்வே நிர்வாகத்தால் பராமரிக்கப்படும் மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்கள், அவ்வப்போது அரசாங்கத்தால் அறிவிக்கப்படும்
கிராம பஞ்சாயத்துகளுக்கு சொந்தமான கட்டிடங்கள்
ஒரு கிராம பஞ்சாயத்து எல்லைக்கு உட்பட்ட வனப்பகுதியில் அமைந்துள்ள வனத்துறையின் கட்டிடங்கள்
ஒளி வீடுகள்
வருவாய்த் துறையால் பராமரிக்கப்படும் அனைத்து கால்நடைகளும்; மற்றும்
சூறாவளி முகாம்கள்
ஆம். கட்டணம் செலுத்தியவுடன்இ அதற்கான இரசீது உடனடியாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் இணையதளத்திலிருந்து உடனடியாக தரவிறக்கம் செய்யப்பட்டு செலுத்து பவருக்கு அளிக்கப்படும். அது மட்டு மின்றிஇ பொது மக்கள் தாங்கள் செலுத்திய கட்டணத்திற்கான இரசீதினை அவர்களாகவே இணையதளத்தில் பதிவு செய்துஇ தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இல்லை தனி நபர் குடிநீர் குழாய் இணைப்புகளை பயன்படுத்தும் வீடுகளுக்கு மட்டுமே குடிநீர் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
அரசு ஆணை எண் 260, ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சித் துறை நாள்: 09.12.1998 இன் படி மாதாந்திர குடிநீர் கட்டணம் ரூ.30/- என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் சில ஊராட்சிகள், கிராம ஊராட்சி தீர்மானத்தின் மூலம் நிர்வாக வசதிக்காக குடிநீர் கட்டணத்தை உயர்த்தியுள்ளன.
தண்ணீர் கட்டணம் அரையாண்டு அல்லது ஆண்டு அடிப்படையில் வசூலிக்கப்படுகிறது. ஆனால் கட்டணம் மாதாந்திர அடிப்படையில் கணக்கிடப்படும்.
ஆம் ஊராட்சிகளில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளுக்கு வழங்கப்படும் புதிய குடிநீர் குழாய் இணைப்புகளுக்கு முன்வைப்புத் தொகையாக ரூ.1000/- செலுத்தவேண்டும்.
தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 ன் படி ஊரக பகுதிகளில் அமையபெரும் தொழில்கள், வணிகம் மற்றும் நிறுவனம் இவற்றின் மீது வரிகள் விதிப்பதற்கு கிராம ஊராட்சிகளுக்கு அதிகாரம் வழங்கியுள்ளது.
அரசியலமைப்பு சட்டத்தின் 276வது பிரிவு தொழில்வரி தொடர்பான சட்டம் இயற்றவும், வரி விதித்தல் மற்றும் வசூலித்தல் தொடர்பான வழிகளை வகுப்பதற்குரிய அதிகாரங்களை மாநிலங்களுக்கு வழங்கியுள்ளது.
அரசியலமைப்பின் 276வது பிரிவு, தனி நபரிடமிருந்து வசூலிக்கப்படவேண்டிய தொழில் வரிக்கான அதிகபட்சமான தொகையை நிர்ணயித்துள்ளது. தொழில் வரியாக ஆண்டொண்டிற்கு அதிகபட்சமாக ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட தொகை ரூ.250 ஐ ரூ.2500/- ஆக உயர்த்தி 1988ல் பிரிவு 276ல் திருத்தம் செய்துள்ளது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 276 (2)- ன் அடிப்படையில், தமிழக அரசு 1994-ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தை இயற்றி, கிராம ஊராட்சிகள் தொழில், வணிகம் மற்றும் நிறுவனம் இவற்றின் மீது வரி விதிக்க பிரிவு 198 ன்படி கிராம ஊராட்சிகளுக்கு அதிகாரம் வழங்கியுள்ளது.
கிராம ஊராட்சிகள் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தொழில்கள் விகிதத்தை திருத்தி அமைக்கவும், அத்தகைய திருத்தத்திற்கு முன்பாக இருந்த தொகையை விட திருத்தப்படும் தொழில்வரி விகிதம் 25 விழுக்காடுகளுக்கு குறையாமலும் 35 விழுக்காட்டிற்கு மிகாமலும் நிர்ணயித்துக் கொள்ள கிராம ஊராட்சிகளுக்கு துணைவிதி (13)-ல் குறிப்பிடப்பட்டுள்ளது
ஆம், தமிழ்நாடு கிராம ஊராட்சிகள் (தொழில்கள், வணிகம்,… மற்றும் வேலைவாய்ப்பின் மீது வரி விதித்தல்), விதிகள் 2000ல் உள்ளன
தொழில்களில் ஈடுப்பட்டுள்ள அனைவரும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தொழில்வரி செலுத்துவது இன்றியமையாத கடமையாகும். பணியாளர்களிடமிருந்து குறிப்பிடப்பட்ட விகிதத்தில் தொழில்வரியை பிடித்தம் செய்வதும் அதனை உள்ளாட்சி அமைப்புகளில் செலுத்துவதும் நியமன அலுவலரின் கடமையாகும்
ஆம்